1. Home
  2. தமிழ்நாடு

காதலிக்கு வித்தியாசமாக காதலை சொன்ன காதலன்..!

Q

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் காதலர் ஒருவர் தனது காதலியின் பெயர் பொறிக்கப்பட்ட பலூன்களை பறக்கவிட்டு உள்ளார். காற்றில் பறக்கும் என் காதலே என் உயிராக, அவளது காதலுக்கா எந்த உயரத்துக்கும் போவேன் என்று கூறி, தனது காதலை வெளிப்படுத்தும் விதமாக நூற்றுக்கும் மேற்பட்ட பிங்க் நிற பலூன்களை அவர் பறக்கவிட்டுள்ளார். அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகியதுடன் பலரையும் கவர்ந்துள்ளது.
அந்த பிங்க் மற்றும் இளஞ்சிவப்பு நிற பலூன்களில் 'என் காதல் காற்றில் உள்ளது' மற்றும் 'லவ் யூ காவ்யா' என்று எழுதப்பட்டிருந்தது. இந்தூரின் காவ்யா நிச்சயமாக ஒரு அன்பான துணையைப் பெற்றாள் என்று பலரும் கூறி வருகின்றனர். வீடியோ, பகிரப்பட்ட சில மணிநேரங்களிலேயே சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வைரலானது.
இவரது இந்த முயற்சியை பெரும்பாலானோர் கிண்டல் செய்தனர். மேலும் சிலர் அந்த பெண் இதற்கு என்ன பதில் கூறினாள் என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தனர்



 

Trending News

Latest News

You May Like