பணத்துக்காக கடத்தப்பட்ட சிறுவன் எரித்துக்கொலை... குடும்ப நண்பர் வெறிச்செயல் !

தெலங்கானா மாநிலம் மகபூப் நகரில் உள்ள கிருஷ்ணா காலனி பகுதியில் ரஞ்சித் – வசந்தா தம்பதி வசித்து வந்தனர். இத்தம்பதியின் மூத்த மகன் தீட்சித் (9) கடந்த 18ஆம் தேதி முதல் காணாமல் போனார். நண்பர்களுடன் விளையாட செல்வதாக கூறிவிட்டு மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற தீட்சித் மீண்டும் திரும்பவில்லை.
இரவு வெகுநேரமாகியும் வீட்டுக்கு வராததால் அவர்கள் பல நண்பர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடினர். இந்நிலையில், அன்றிரவு தீட்சித்தின் தாயாருக்கு மர்மஒருவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், மகனை கடத்தி வைத்திருப்பதாகவும், ரூ.45 லட்சத்தை கொடுத்தால் உயிருடன் விடுவிப்பேன் எனவும் கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.
இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து சைபர் க்ரைன் போலீசார் உதவியுடன் விசாரணை நடைபெற்றது. எனினும் பிடிக்க முடியாததால் கேட்டபணத்தை கொடுத்து மகனை மீட்கும் போது பிடிக்கலாம் என திட்டமிட்டனர்.
அதன்படி போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில், நேற்று முன்தினம் இரவு மகபூப் நகர் கூட்டு ரோட்டில் ரஞ்சித் பணத்துடன் காத்திருந்தார். ஆனால் யாரும் வராததல் வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில், நேற்று காலையில் ஊருக்கு வெளியே உள்ள தானமைய்ய குட்டா வனப்பகுதியில் சிறுவனின் உடல் கருகிய நிலையில் கிடந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ரஞ்சித் குடும்பத்துக்கு நன்கு பரிச்சயமான சாகர் (22) என்பவரே தீட்சித்தை கடத்தி கொலை செய்தது தெரியவந்தது.
பின்னர், அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், பணத்துக்கு ஆசைப்பட்டு சிறுவனை கடத்தியதாகவும், தன்னை தீட்சித் அடையாளம் கண்டுகொண்டதால் அவனை கொலை செய்ததாகவும் சாகர் வாக்குமூலம் அளித்தார். இததையடுத்து அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
newstm.in