1. Home
  2. தமிழ்நாடு

ஆபரேஷன் சிந்தூரில் ராணுவ வீரர்களுக்கு உதவிய சிறுவனுக்கு பிரதமரின் தேசிய பாலர் விருது!

ச்

பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ வீரர்களுக்கு பால், தேநீர், தயிர் வழங்கி உதவிய சிறுவனுக்கு பிரதமரின் தேசிய பாலர் விருது வழங்கப்பட்டது. வீர பாலகர் தினமான இன்று டிசம்பர் 26ம் தேதி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இந்த விருதை வழங்கி கௌரவித்தார். வீரமும் விவேகமும் கொண்ட சிறார்களின் சாதனைகளை போற்றும் நாளாக இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான விருதுகளில், மின்சாரம் தாக்கிய 6 வயது சிறுவனை காப்பாற்ற முயன்று உயிரிழந்த 8 வயது சிறுமி வயோமா பிரியாவுக்கும் விருது வழங்கப்பட்டது. அவருக்கான விருதை அவரது தாய் அர்ச்சனா சிவராம கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். ராணுவ வீரர்களுக்கு சேவை செய்த சிறுவன், தானே நேரில் வந்து விருதை பெற்றுக்கொண்டது அனைவரையும் நெகிழ வைத்தது.

விருது பெற்றது குறித்து பேசிய சிறுவன், ராணுவ வீரர்கள் கிராமத்திற்கு வந்த நாளே சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாக கூறினார். தினமும் பால், தேநீர், மோர் எடுத்துச் சென்றதாக தெரிவித்தார். “இந்த விருது கிடைக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை” என்ற அவரது வார்த்தைகள் மனதை தொட்டன. வீர சிறார்களின் தியாகமும் மனிதநேயமும் நாட்டின் பெருமையாக மாறியுள்ளது.

Trending News

Latest News

You May Like