1. Home
  2. தமிழ்நாடு

பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் ஜார்ஜ் ஃபோர்மேன் காலமானார்..!

Q

பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் ஜார்ஜ் ஃபோர்மேன் (76) காலமானார். 2 முறை உலக ஹெவிவெயிட் சாம்பியனாக இருந்துள்ள இவர், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கமும் வென்றுள்ளார். இவர் நேற்று (மார்ச் 21) உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இவர் 1968இல் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார். மேலும், 21 வருட இடைவெளியில் இரண்டு முறை உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார். இதன்மூலம், வரலாற்றில் இரண்டாவது முறையாக 45 வயதில் மிக வயதான சாம்பியனானார். 1974ஆம் ஆண்டு நடந்த பிரபலமான ரம்பிள் இன் தி ஜங்கிள் சண்டையில் முகமது அலியிடம் தோல்வியை தழுவினார்.

ஆனால் ஃபோர்மேனின் தொழில்முறை குத்துச்சண்டை வாழ்க்கை 68 நாக் அவுட்கள் உட்பட 76 வெற்றிகளைப் பெற்று வியக்கத்தக்க வகையில் பெருமை சேர்த்துள்ளது. 1997ஆம் ஆண்டு அவர் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அவரது குடும்பத்தினர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவில் கூறியதாவது, மனிதாபிமானம் கொண்டவர், ஒலிம்பியன் மற்றும் இரண்டு முறை உலக ஹெவிவெயிட் சாம்பியனான ஜார்ஜ் ஃபோர்மேன் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தனது 19 வயதில், தொழில்முறை வீரராக மாறி 37 தொடர்ச்சியான போட்டிகளில் வென்றார். அவர் தனது வாழ்க்கையில் ஐந்து போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

1973ஆம் ஆண்டு ஜமைக்காவின் கிங்ஸ்டனில் நடந்த போட்டியில், முன்னர் தோற்கடிக்கப்படாத நடப்பு சாம்பியனான ஜோ ஃப்ரேசியரை வீழ்த்தி, முதல் இரண்டு சுற்றுகளில் ஆறு முறை அவரை வீழ்த்தினார்.

இவர் நேற்று (மார்ச் 21) உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இருந்தபோதிலும் அவரது இறப்புக்கான காரணம் குறித்த தகவலை வெளியிடவில்லை. ஜார்ஜ் ஃபோர்மேன் இறப்புக்கு அவரது ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like