தேதி குறிப்பிடாமல் இரு அவைகளும் ஒத்திவைப்பு!
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2024-2025-ம் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை 23-ந்தேதி தாக்கல் செய்தார். அதன்பின் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தின்போது ராகுல் காந்தி மோடி தலைமையிலான மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்தார்.நேற்று வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
இன்று மாநிலங்களவையில் ஜெயா பச்சன்- மாநிலங்களவை தலைவர் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டதில் ஒரு அமர்வுக்கு முன்னதாகவே பட்ஜெட் கூட்டம் நிறைவடைந்துள்ளது.