சலித்துப்போன கள்ளக்காதல்… பெண் அடித்துக்கொலை!

கள்ள உறவில் இருந்து வந்தவர்கள் பணம் பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்னை கொலையில் முடிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த ஆஷிஷ் என்பவருக்கும், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிகிதா என்பவரும் மும்பையில் லிவ்ங் டு கெதரில் இருந்து வந்தனர். இருவரும் சேர்ந்து பிசினெஸ் ஒன்றை தொடங்கினர்.
அந்த பிசினஸில் இருவரும் சேர்ந்து 15 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக தெரிகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் போலீஸில் இருவர் மீதும் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து இருவரும் தலைமறைவானார்கள்.
அப்போது பணத்தை பிரிப்பதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ஆஷிஷ் நிகிதாவை அடித்து கொலை செய்து விட்டு, உடலை குழி தோண்டி புதைத்துவிட்டார்.
அப்பெண்ணின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஆஷிஷ் கொலை செய்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவரை கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.
newstm.in