சலித்துப்போன கள்ளக்காதல்… பெண்ணை கொன்று டாய்லெட்டுக்குள் வீசிய நபர்!

சலித்துப்போன கள்ளக்காதல்… பெண்ணை கொன்று டாய்லெட்டுக்குள் வீசிய நபர்!

சலித்துப்போன கள்ளக்காதல்… பெண்ணை கொன்று டாய்லெட்டுக்குள் வீசிய நபர்!
X

கள்ளக்காதலில் சலிப்பு ஏற்பட்டதால் 40 வயது பெண்ணை, 35 வயது இளைஞர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த பூலட்சுமி என்ற 40 வயது பெண்ணும், மங்கமூரி வெங்கட்டா என்ற 35 வயது ஆணும் ஏற்கனவே திருமணமானவர்கள். இவர்கள் இருவரும் சில தினங்களுக்கு முன்பு செகந்திராபாத்தில் சந்தித்துக் கொண்டனர். அப்போதில் இருந்து பழக்கம் ஏற்பட்டது. அது பின்னர் கள்ளக்காதலாக மாறியது.

இருவரும் நான்கு மாதங்கள் தங்கள் வீட்டுக்கு தெரியாமல் உல்லாசமாக இருந்து வந்தனர். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு இருவரும் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து குடித்துள்ளனர். அப்போது மது போதவில்லை என்பதால் அந்தப் பெண் அந்த இளைஞரின் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து கூடுதலாக மது வாங்கியுள்ளார்.

அப்போது அதுகுறித்து தெரியாக வெங்கட் போதை தெளிந்த பிறகு பணம் எங்கே என்று அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார். விஷயத்தை அவர் கூறவும் இருவருக்கும் சண்டை வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கட், அந்த பெண்ணை கொன்றுவிட்டார். பின்னர் அவரது உடலை டாஸ்லெட்டுக்குள் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.

இதனையடுத்து போலீஸூக்கு ஹோட்டலில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்தது. பின்னர் வெங்கட்டை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

newstm.in

Next Story
Share it