ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு!

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு!

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு!
X

ரயில்வே ஊழியர்கள் 11.58 லட்சம் பேருக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா பொது முடக்கத்தால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கான போனஸ் குறித்து அறிவிப்பு ஏதும் வெளியாகாமல் இருந்தது.

இதனால் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தனர். இந்நிலையில் நேற்று மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால போனஸ் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று ரயில்வே ஊழியர்களுக்கு மத்திய அரசு போனஸ் அறிவித்துள்ளது. இதன்மூலம் 11.58 லட்சம் ஊழியர்கள் பயன் பெறுவார்கள். 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்க ரூ.2081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

அதிகபட்சமாக ஒரு ஊழியருக்கு ரூ.17,951 வரை போனஸ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Next Story
Share it