1. Home
  2. தமிழ்நாடு

தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்..!!

Q

விஜய் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறையை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், விஜய் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். அதனடிப்படையில், விடிய விடிய வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். முடிவில், அது புரளி என தெரிய வந்தது.

ஏற்கனவே கடந்த செப்.,28ம் தேதி விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், 2வது முறையாக மிரட்டல் வந்துள்ளது. கரூரில் நடந்த தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தால் விஜய் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில், இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் தவெகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like