1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் உள்ள கோயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

Q

கர்நாடகா தலைநகர் பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கபே எனும் ஓட்டலில் கடந்த வாரம் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் ஒரு பெண் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடகா போலீஸாரும், என்ஐஏ அதிகாரிகளும் விசாரணை நடத்தியதில், பெங்களூரு குண்டுவெடிப்புக்கும், மதுரையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த டிபன் பாக்ஸ் குண்டுவெடிப்புக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, என்ஐஏ சிறப்பு டீம் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றன.

இது ஒருபுறம் இருக்க, பெங்களூர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று மாலை ஒரு இ-மெயில் வந்துள்ளது. அதில், சென்னையில் உள்ள இந்து கோயிலில் குண்டு வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இ மெயிலானது ஜாபர் சேட் என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெங்களூர் போலீஸார், இதுதொடர்பாக உடனடியாக சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர். மேலும், அந்த இ மெயிலையும் அனுப்பினர்.

இதனைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோயில்களில் பாதுகாப்புப் பணியிலும், கண்காணிப்பு பணியிலும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் தீவிர சோதனைகளுக்கு பிறகே கோயில்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். 

Trending News

Latest News

You May Like