கோவையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
கோவையில் தனியார் பள்ளிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கு இன்று காலை இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், பள்ளி நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் பள்ளியில் சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளிகளான. அவிலா கான்வென்ட் பள்ளி உள்ளிட்ட மூன்று பள்ளிகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளியில் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.