1. Home
  2. தமிழ்நாடு

துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Q

புதுச்சேரி சட்டப்பேரவை அருகில் உள்ள‌து துணைநிலை ஆளுநர் மாளிகை.

 இன்று (மே 19) மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதைத்தொடர்ந்து காவல்துறை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.மேலும் ஆளுநர் மாளிகை சுற்றியுள்ள சாலைகள், இணைப்பு சாலைகள் அனைத்தும் தடுப்புகள் அமைத்து போலீசார் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். 

வெடிகுண்டு கிடைக்காத நிலையில் மிரட்டல் விடுத்த மர்ம நபரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

கடந்த 2 மாதங்களில் துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு 6வது முறையாக மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like