1. Home
  2. தமிழ்நாடு

பிரபல தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

1

மும்பையில் உள்ள வோக்கார்ட் மருத்துவமனைக்கு திங்கள்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெடிகுண்டு சோதனை நடந்து வருகிறது.

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட செய்தி அறிந்தவுடன் மருத்துவமனை பகுதியில் மக்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் மருத்துவமனை வளாகம் மூடப்பட்டது. தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் வெடிகுண்டு சோதனை நடத்தினர். நடந்த சோதனையில் சந்தேகத்துக்கு உரிய வகையில் எந்தப் பொருளும் கிடைக்கவில்லை

முன்னதாக, மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மனநல மருத்துவமனைக்கு ஜூன் 12 அன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அது பின்னர் போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் தலைநகர் டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகம் மற்றும் ரயில் அருங்காட்சியகம் உட்பட பல அருங்காட்சியகங்களுக்கும் ஜூன் 12 அன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

Trending News

Latest News

You May Like