1. Home
  2. தமிழ்நாடு

அமரன் படம் ஓடும் திரையரங்கில் குண்டு வீச்சு..!

Q

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் கடந்த தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியானது அமரன் படம். ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம், வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்றுள்ளது. 

இதனிடையே, காஷ்மீரிகளை தவறாக சித்தரித்துள்ளதாக இத்திரைப்படத்திற்கு எதிராக பல அமைப்பினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில், அமரன் படம் ஓடிக்கொண்டிருக்கும் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் பகுதியில் இயங்கி வரும் அலங்கார் திரையரங்கில் அமரன் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இத்திரையரங்கில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத சிலர் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றனர். திரையரங்கின் வளாகத்தின் முன்புறத்தில் குண்டு வீசப்பட்டதாக கூறப்படும் நிலையில், ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..


 


 

Trending News

Latest News

You May Like