குண்டு வெடிப்பு எதிரொலி : தமிழக எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்..!

தமிழக எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பைத் தீவிரப்படுத்த தமிழக காவல்துறை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக, கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் எல்லைகளில் சோதனைச் சாவடிகளில் உஷார்படுத்தப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் இருந்து நீல நிற கார் ஒன்று வேகமாகச் சென்றதாக கேரளா மாநில காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் தப்பாமல் இருக்கும் வகையில், இரு மாநில சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், புளியரை சோதனைச் சாவடியில், தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் பலத்த சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றன.