விவசாயம் செய்யும் பாலிவுட் உச்ச நடிகர்... வைரலாகும் புகைப்படம்!

கொரோனா பொதுமுடக்கம் பலரின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை நிகழ்த்தியுள்ளனது. அந்த வகையில், பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான சல்மான் கான் தனது நிலத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் கொரோனா பொதுமுடக்கத்தில் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். பொதுமுடக்கத்தில் உணவின்றி தவித்தவர்களுக்கு தனது ஏற்பாட்டில் வாகனங்கள் மூலம் உணவளித்தார். அத்துடன் பொதுமுடக்கத்தால் சொந்த ஊர் திரும்ப முடியாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவி செய்தார்.
தற்போது சல்மான் கான் பாடல் பாடுவதில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையே தனது நிலத்தில் விவசாயப் பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். அனைத்து விவசாயிகளையும் மதியுங்கள் என உடல் முழுவதும் சேற்றுடன் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அத்துடன் விவசாயப் பயிர்களை கையில் ஏந்திக்கொண்டு நிற்கும் மற்றொரு புகைபடத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
newstm.in