அயோத்தி ராமர் கோவில் வீட்டுமனை வாங்கிய பாலிவுட் சூப்பர்ஸ்டார்..!
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் திறப்பு விழா ஜனவரி 22-ம்தேதி நடைபெற உள்ளது. கோயிலில் அன்று ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். இந்த நிலையில், அமிதாப் பச்சன் அயோத்தியில் 10 ஆயிரம் சதுர அடியில் வீட்டுமனையை வாங்கியிருப்பதாகவும், இதன் மதிப்பு ரூ.14.5 கோடி இருக்கும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.
கோயில் திறப்பு விழாவுக்குப் பிறகு, உலகின் மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக அயோத்தி உருவெடுக்கப்போகிறது. இதையடுத்து இங்கு பெரிய பொருளாதார நடவடிக்கைகளை அரசும் பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர். இதனால் இங்கு நிலங்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
10 ஆயிரம் சதுர அடி நிலம் 14.5 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. பிரபலங்கள் பலர் அயோத்தியில் வீடு வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். சரயூ நதியில் இருந்து 15 நிமிட தொலைவில் குறிப்பிட்ட அளவு நிலத்தை நடிகர் அமிதாப் பச்சன் வாங்கியுள்ளார்.மேலும் சரயூ நதிக்கரையில் ஏராளமான 5 ஸ்டார் ஓட்டல்கள் வரவுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது
தற்போதைய சூழலில் அயோத்தி நகரில் 110 சிறு மற்றும் பெரிய ஓட்டல் முதலாளிகள் நிலத்தை வாங்கியிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் 85 ஆயிரம் கோடி ரூபாயில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ஏராளமான முன்னணி நிறுவனங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இன்னும் ஏராளமான வசதிகள் அயோத்தி நகரில் தடம் பதிக்க காத்திருக்கின்றன. விரைவில் ஸ்மார்ட் சிட்டியாக அயோத்தி மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை.