1. Home
  2. தமிழ்நாடு

சமந்தா இடத்தை பிடித்த பாலிவுட் நடிகை…!

1

 2021-ம் ஆண்டு அல்லு அர்ஜூன் நடிப்பில் வௌியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் புஷ்பா தி ரைஸ். இப்படத்தை, பிரபல தெலுங்கு இயக்குநர் சுகுமார் இயக்கியிருந்தார். இப்படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தான நடித்திருப்பார். சுனில், ஃபகத் பாசில், பிரசாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்தித்தில் நடித்திருந்தனர். தேவி 2 பிரசாத் படத்திற்கு இசை அமைத்திருந்தார்.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது, புஷ்பா தி ரூல் என்ற பெயரில் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இரண்டாம் பாகத்திலும் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, சுனில், ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடிக்கின்றனர். மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், முதல் பாகத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா நடனமாடியிருந்தார். இப்பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்து மாபெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல, இரண்டாம் பாகத்திலும் ஒரு குத்து பாடல் இடம்பெற்றுள்ளதாம். இதில் பிரபல பாலிவுட் நடிகை ட்ரிப்டி டிம்ரி நடனமாடுவார் என்று கூறப்படுகிறது. இவர் ரன்பீர் கபூர் நடித்த அனிமல் திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like