1. Home
  2. தமிழ்நாடு

பிரபல பாலிவுட் நடிகை பாஜகவில் இணைந்தார்..!

1

பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19-ம் தேதியும், 2-ம் கட்ட தேர்தல் கடந்த 26-ம் தேதியும் நடைபெற்றது. இதையடுத்து, வரும் 7, 13, 20,25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. 


ஜூன் 1-ம் தேதி கடைசி கட்டமான 7-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.  தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியல் பிரபலங்கள் மாற்று கட்சிகளில் இணையும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. அதே போல், சினிமா பிரபலங்களும் அரசியல் கட்சிகளில் இணையும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. 

இந்நிலையில், பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். அனுபமா என்ற இந்தி சீரியல் மூலம் பிரபலமான வருபவர் ரூபா கங்குலி.  இவர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். 

டெல்லியில் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் வினோத் தவ்டே முன்னிலையில் ரூபாலி கங்குலி அக்கட்சியில் இணைந்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ரூபா கங்குலி, பிரதமர் மோடியின் பாதையை பின்பற்றி நாட்டு மக்களுக்கு சேவை செய்ய நான் பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன். அமித்ஷாவின் தலைமையில் சிறப்பாக  செயல்பட்டு விரும்புகிறேன் என்று கூறினார். 

Trending News

Latest News

You May Like