1. Home
  2. தமிழ்நாடு

பாலிவுட் நடிகை ஈஷா குப்தா மருத்துவமனையில் அனுமதி ?

1

பாலிவுட்டில் கடந்த 2012ம் ஆண்டில் ஜன்னத் 2 என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஈஷா குப்தா.சமூக வலைதளங்களில் இவர் பகிர்ந்துவரும் ஹாட் புகைப்படங்கள் காரணமாக ஈஷாவை இன்ஸ்டாகிராமில் 12 மில்லியனுக்கும் அதிகமானோர் பாலோ செய்து வருகின்றனர்.

ஜன்னத் 2 படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதிற்கும் பரிந்துரை செய்யப்பட்டார். இந்தப் படத்தில் இம்ரான் ஹஷ்மியுடன் இணைந்து இவர் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடித்ததற்காக இவருக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன.

இந்நிலையில் அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்து காணப்படுகிறார். இந்த புகைப்படத்திற்கு ஹைபர்பேரிக் தெரபி என தலைப்பிடப்பட்டிருந்தது. 'மயோசிடிஸ்' நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா முன்பு இதே சிகிச்சையை மேற்கொண்டார். இது தசை அழற்சி மற்றும் தொற்றுநோயைக் குறைக்கிறது.

இதன் மூலம் ஈஷாகுப்தாவுக்கும் மயோசிட்டிஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியுள்ளது.

Trending News

Latest News

You May Like