3 கோடி வாடகை வீட்டிற்கு செல்லும் பிரபல பாலிவுட் நடிகர் - பயில்வான் ஓபன் டாக்..!

மும்பை பாந்த்ராவில் கடற்கரையையொட்டி இருக்கும், ஷாருக்கானின் "மன்னத் பங்களா ", ரசிகர்கள், மற்றும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்த இடமாகும். காரணம், இந்த மன்னத் பங்களா அருகில் நின்று பலரும் செல்பி எடுத்து கொள்கிறாராம்..அதனால்தான், இந்த பங்களாவை புதுப்பித்து, பிரம்மாண்டமாக கட்ட ஷாருக்கான் முடிவு செய்திருக்கிறாராம்.. கூடுதலாக 2 மாடி கட்ட போகிறாராம்.. இதற்கான கட்டுமான பணிகள் மே மாதத்திலிருந்து துவங்க உள்ளதாக தெரிகிறது.
இதன்காரணமாக, இதற்காக தற்காலிகமாக 3 வருடங்களுக்கு வேறு இடத்தில் குடும்பத்தோடு, குடிபெயர்ந்து செல்ல முடிவு செய்துள்ளார். எனவே, அவர் வசிக்கும் பாந்த்ரா பகுதியிலேயே, பாலிஹில் பகுதியில், ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு எடுத்திருக்கிறாராம்..
இந்த குடியிருப்பானது, பிரபல தயாரிப்பாளர் வாசு பாக்னானிக்கு சொந்தமானது.. இந்த குடியிருப்பு 4 மாடிகளை கொண்டது.. ஒவ்வொரு மாடியும் ஒவ்வொரு வீடாக வீடாக கட்டப்பட்டுள்ளது. இதற்காக, ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம், தயாரிப்பாளர் வாசுவின் மகன், மகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
தன்னுடைய பாதுகாப்பு ஊழியர்கள், சமையல்காரர்கள் என எல்லாருமே தன்னுடன் தங்கவேண்டும் என்பதற்காகவே, இந்த 4 மாடி வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளாராம். வரும் மே மாதம் இங்கே குடிபெயர உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் தந்துள்ள பேட்டியில், "ஷாருக்கான் 3 கோடி வாடகைக்கு அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்ல போகிறார்.. தற்போதுள்ள வீட்டுக்கு முன்பு, பல ரசிகர்கள் கூட்டமாக வருவதால், இடைஞ்சல் ஏற்படுகிறதாம்.. அதனால், தற்போதுள்ள வீட்டை விரிவுபடுத்த கட்ட திட்டமிட்டுள்ளார்.. அதனால் பங்களாவை காலி செய்து, பாலிஹில் என்ற ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புக்கு வாடகைக்கு செலகிறார்.. 3 வருட காலத்துக்கு புதிய வாடகை வீட்டில் தங்க போகிறார்.. இந்த ஆடம்பர வீட்டுக்கு மாசம் 24 லட்சம்.. அதாவது ஒரு வருடத்துக்கு 3 கோடி வாடகையாகும்.. அப்படியானால் 3 வருடங்களுக்கு 9 கோடி ரூபாய் வாடகைக்கு செலவழிக்க நேரிடும்" என்று தெரிவித்துள்ளார்.