போலாம் ரைட்... சென்னைக்கு படையெடுக்க தயாராகும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள்..!

நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், அந்த கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவு பெற்றதை அடுத்து பிரமாண்டமான விழா கொண்டாடப்பட உள்ளது.
சென்னை இசிஆர் சாலையில், மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி கிராமத்தில் வரும் 26ஆம் தேதி காலை 9 மணிக்கு முதலாம் ஆண்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் அதிக கூட்டம் சேரக்கூடாது என்பதற்காக, முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட இருப்பதாகவும், மொத்தம் 2000 பேருக்கு மட்டுமே பாஸ் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இன்று முதல் பாஸ் வழங்கும் பணி தொடங்கியுள்ளதால், பாஸ் உள்ளவர்கள் மட்டுமே ஆண்டு விழாவில் கலந்து கொள்ள அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர்களுக்கு பாஸ் விநியோகம் தொடங்கியது.