1. Home
  2. தமிழ்நாடு

360 நாட்களில் அதிக லாபத்தை பெரும்படியான BOB 360 டெபாசிட் திட்டம்..!

1

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் பரோடா வங்கி 360 என்னும் புதிய டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஒரு வருடத்தில் டெபாசிட் செய்த பணத்திற்கான பலனை பெற விரும்பும் முதலீட்டாளர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். மேலும், இந்த திட்டத்திற்கு 7.60 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

நீங்கள் டெபாசிட் செய்த தொகை 360 நாட்களுக்குப் பிறகு வட்டியுடன் சேர்த்து மிகப் பெரிய தொகையாக உங்களுக்கு கிடைக்கும். பேங்க் ஆப் பரோடா வங்கிகளுக்கு நேரடியாக சென்று 360 திட்டத்தின் கீழ் இணைந்து பயன்பெறலாம் அல்லது வங்கியின் நெட் பேங்கிங் தளம் வழியாகவும் ஆன்லைன் மூலமாக FD திறக்கலாம்.

இந்த திட்டம் குறித்து பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் செயல் இயக்குனர் கூறுகையில் குறுகிய காலத்தில் அதிஅக் வட்டிக்கு உறுதியான வருமானம் பெற நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் ஒரு நல்ல சாய்ஸ் என்று கூறியுள்ளார்.
 

Trending News

Latest News

You May Like