எதிரே வந்த படகுகள் நேருக்கு நேர் மோதல் !! நீரில் மூழ்கி 32 பேர் உயிரிழப்பு...
எதிரே வந்த படகுகள் நேருக்கு நேர் மோதல் !! நீரில் மூழ்கி 32 பேர் உயிரிழப்பு...

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள சதர்காட், மிகப் பெரிய நதி துறைமுகமாக விளங்கி வருகிறது. இந்த ஆற்றுத் துறைமுகம் வழியாக வணிகப் போக்குவரத்து சேவைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வங்கதேசத்தின் முன்ஷிகஞ்ச் என்ற பகுதியிலிருந்து தலைநகர் டாக்காவுக்கு மார்னிங் என்ற படகு சுமார் 60க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்து. அப்போது படகு சதர்காட்டில் இருந்து ஒரு மீட்டர் தொலைவில் உள்ள ஃபராஷ்கஞ்சில் பகுதியை அடைந்த போது எதிரே வந்த மொயூர்-2 என்ற பெயர் கொண்ட படகு 'மார்னிங்' மீது பலமாக மோதியது.
இதில் நிலைத் தடுமாறிய மார்னிங் படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதில் படகில் பயணம் செய்த 32 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் இறந்தவர்களில் உடல்களை மீட்டனர்,
மேலும் நீரில் மூழ்கி காணமல் போன பலரையும் மீட்புப் படையினர் தேடி வருகிஇது குறித்து தெரிவித்துள்ள வங்கதேச நீர் வழிப்போக்குவரத்துத் துறை ஆணையர்கள், விபத்துக்கு காரணமான மொயூர்-2 கப்பலை கண்டுபிடித்துள்ளதாகவும் ஆனால் அதில் உள்ள கேப்டன் மற்றும் ஊழியர்கள் தப்பி விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரிக்க 4 பேர் கொண்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
Newstm.in