இன்று இரவு வானில் அரிதாகத் தோன்றுகிறது புளூ மூன்!

!
இன்று இரவு வானில் புளூ மூன் அரிதாகத் தோன்றுகிறது. இந்த ப்ளூ மூனை பார்க்க நிபுணர்கள் மற்றும் பொது மக்கள் ஆர்வமுடன் காத்துள்ளனர்.
ஒரு மாதத்தில் வரும் 2-வது பௌர்ணமியை குறிக்க "புளூ மூன்" என்ற சொல்பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் சில சமயங்களில் பௌர்ணமி, நீல நிறமாகத் தெரியும்.
வழக்கமாக, ஒவ்வொரு மாதமும் ஒரு பௌர்ணமி ஒரு அமாவாசை மட்டுமே ஏற்படும். ஆனால், அரிதாக, ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமி வரும். அப்படி வரும் வரும் 2-வது பௌர்ணமியை , 'புளூ மூன்' என்று அழைக்கப்படுகிறது. இதற்கு அறிவியல் ரீதியாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை நேரு கோளரங்க இயக்குநர் அரவிந்த் பரஞ்சிபயே செய்தியாளர்களிடம் கூறுகையில், அக்டோபர் 1-ம் தேதி முதல் பௌவுர்ணமி வந்தது. 2-வது பௌவுர்ணமி, அக்டோபர் 31-ம் இரவு 8 மணி 19 நமிடத்திற்கு தோன்றுகிறது என தெரிவித்துள்ளார்.
இதனால் ப்ளூ மூனை பார்க்க பொது மக்கள் ஆர்வமுடன் காத்துள்ளனர்.