1. Home
  2. தமிழ்நாடு

3 நிமிட தாமதத்திற்காக வருத்தம் தெரிவித்து பிளிங்கிட் CEO போஸ்ட்!

1

பிளிங்கிட் நிறுவனத்தின் CEO அல்பிந்தர் திண்ட்சா தன் டெலிவரி அனுபவத்தை X தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புத்தாண்டுக்காக அல்பிந்தர் குருகிராமில் உள்ள பிளிங்கிட் கடையில் பத்து நிமிட டெலிவரி சேவைக்காக ஆர்டர்களை பேக் செய்து டெலிவரி செய்துள்ளார். "இந்த ஆண்டு புத்தாண்டை எங்கள் கடைகளில் இருந்து தொடங்குகிறேன்.. என்று தனது X தளத்தில் பதிவிட்டிருந்தார். அதோடு மஞ்சள் நிற டெலிவரி ஏஜென்ட் ஜாக்கெட்டை அவர் அணிந்திருக்கும் புகைப்படத்தையும் போஸ்ட் செய்திருந்தார்.

அல்பிந்தர் இன்னொரு பதிவில், ஒரு ஆர்டரை எடுத்து பேக் செய்ய போவதாக தெரிவித்தார். அதற்கு எத்தனை மணி நேரம் ஆகும் என்று பார்ப்போம் என்றும் கிண்டலாக பதிவிட்டிருந்தார். அதன் பிறகு இன்னொரு பதிவில் உணவுப் பொருட்கள் மற்றும் மளிகை பொருட்கள் நிறைந்த ஒரு பையை பகிர்ந்து, அதை 3 நிமிடங்களுக்குள் வெற்றிகரமாக பேக் செய்ததாக கூறினார். "இதை பேக் செய்ய எனக்கு 2 நிமிடம் 57 வினாடிகள் ஆனது. ஆனால் கடையில் சராசரியாக பேக் செய்யும் நேரம் 1 நிமிடம் 46 வினாடிகள் மட்டுமே என்பதையும் அவர் குறிப்பிட்டு இருந்தார். "தாமதத்திற்காக வருந்துகின்றேன்.. இது யாருடைய ஆர்டர் என்று தெரியவில்லை.. உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்! என்று எழுதியிருந்தார்.


 

Trending News

Latest News

You May Like