இரண்டு நாட்களுக்கு வெளுக்கப் போகும் மழை! மக்களே உஷார் !

தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக , கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கரூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் அண்ணா நகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், கிண்டி, சைதாப்பேட்டை, போரூர், மதுரவாயல் மற்றும் கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதலே மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால், நகரின் பெரும்பாலான சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன.
இன்று ஞாயிறுக்கிழமை என்பதால், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், சாலையில் போக்குவரத்து மிகவும் குறைவாகவே காணப்பட்டது.