1. Home
  2. தமிழ்நாடு

கருப்பு பெட்டி குறித்து தகவல் : முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர்..!

Q

ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் சூழ்நிலையில் விபத்து நடைபெற்ற பகுதியில் மீட்பு குழுவினர் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவர்களது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு தீயில் கருகி சிதைந்து விட்டன.
இந்த நிலையில் விமானத்தில் இருந்து கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதில் விமானத்தில் கடைசி நேர நிகழ்வுகள் பதிவாகி இருக்கும். கருப்பு பெட்டியில் பதிவான விவரங்களை மீட்பதற்கு குறைந்தது 10 நாட்கள் வரை ஆகும் என்று கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் டெல்லியில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு செய்தியாளர்களை சந்தித்தார். ஏர் இந்தியா விமானம் விபத்து நடைபெற்ற பின்னர் அவர் செய்தியாளர்களை சந்திப்பது இதுவே முதல் முறையாகும். செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியதாவது:
ஏர் இந்தியாவின் இடிபாடுகளில் இருந்து கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் குறித்து உயர்நிலைக் குழு தீவிர ஆய்வு நடத்தி வருகிறது. விமான விபத்துக்கான காரணம் குறித்து கருப்பு பெட்டி முக்கிய தகவலை வெளியிடும் என்று எதிர்பார்க்கிறோம்.
விபத்து புலனாய்வு முகாமை டிஜி விசாரணை
ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் மிகவும் தீவிரமாக கருதுகிறது. விமான விபத்து புலனாய்வு முகமையும் இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரித்து வருகிறது. விபத்து நடைபெற்ற உடனேயே விமான விபத்து புலனாய்வு முகாமை டிஜி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்.
 மத்திய அமைச்சர்
நேற்று மாலை 5 மணி அளவில் கருப்பு பெட்டி மீட்கப்பட்டது. இதன் மூலம் முக்கிய தகவல்கள் விரைவில் வெளியாகும். குறிப்பாக விபத்துக்கான காரணம், கடைசி நேரத்தில் விமானத்தில் நடைபெற்ற உரையாடல் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் வெளியே வரும். பொதுமக்களை போல நாங்களும் கருப்பு பெட்டியில் என்ன பதிவாகி இருக்கிறது என்பதை அறிவதற்கு ஆவலாக இருக்கிறோம் என மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.
முன்னதாக விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காப்பீடு தொகையை உடனுக்குடன் வழங்க வேண்டும் என காப்பீட்டு நிறுவனங்களுக்கு இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியது.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து எஃப்ஐஆர் நகலோ, அல்லது பிரேத பரிசோதனை அறிக்கையோ கேட்கக் கூடாது என்றும் தெளிவாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like