1. Home
  2. தமிழ்நாடு

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி இந்தியாவிலேயே ஆய்வு: மத்திய அமைச்சர்..!

Q

ஆமதாபாத்தில் ஏர் இந்தியா' விமானம் விழுந்து நொறுங்கியதற்கான காரணத்தை அறிய, பைலட் அறையில் இருக்கும் கருப்புப் பெட்டியை தேடும் பணியை, ஏ.ஏ.ஐ.பி., எனப்படும், விமான விபத்து விசாரணை முகமை மேற்கொண்டது. பைலட் அறையில் இருக்கும் கருப்புப் பெட்டி என்ற கருவியில், விமானியின் குரல் உட்பட அனைத்து தரவுகளும் பதிவு செய்யப்படும்.
விபத்து நேரும் போது, அது குறித்த விபரங்களை விமானி அதில் பதிவு செய்வார். இதன் வாயிலாக விபத்துக்கான காரணங்களை கண்டறிய முடியும். பி.ஜே., மருத்துவக் கல்லுாரி விடுதி கட்டடத்தின் மேற்கூரையில், கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது. கருப்புப் பெட்டி ஆய்வு செய்ய வெளிநாட்டிற்கு, அனுப்பியதாக தகவல் பரவியது.
இது குறித்து, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியதாவது: கருப்பு பெட்டி வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டதாக வெளியான தகவல்கள் வெறும் வதந்திகளே.
விமான விபத்துகள் விசாரணை ஆணையத்திலேயே, விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி ஆய்வு செய்யப்படும். விசாரணை இந்திய அதிகார வரம்பிற்குள் உறுதியாக உள்ளது.
கருப்புப் பெட்டி தரவுகளை மீட்பது மிகவும் தொழில்நுட்ப ரீதியான விஷயம். ஏ.ஏ.ஐ.பி., எனப்படும், விமான விபத்து விசாரணை முகமை ஆய்வு மற்றும் விசாரணை நடத்தி முடித்த பிறகு, விபத்திற்கான காரணம் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்

Trending News

Latest News

You May Like