பாஜகவின் அடுத்த மூவ்..! ஆளுநர் ஆகிறார் எச்.ராஜா..!
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக, எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டார். இவரது தலைமையின் கீழ், 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்ட தமிழக பாஜக , பல ஆண்டுகளுக்கு பிறகு, 4 இடங்களில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் நுழைந்தது. தமிழகத்தில் தாமரை மலராது என்று கூறி வந்த திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு இந்த வெற்றி மூலம் பதிலடி தந்தார் எல்.முருகன்.
எல்.முருகனின் பணியை அங்கீகரிக்கும் வகையில்,பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட போது, அவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது. தற்போது அவர், மத்திய இணை அமைச்சராக பதவி வகிக்கிறார்.அந்த வரிசையில், தமிழக பாஜக மூத்தத் தலைவர் எச்.ராஜா, ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு பிறகு பாஜக-வை சேர்ந்த எச்.ராஜா ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக்கிய நிலையில், தமிழரொருவருக்கு ஆளுநர் பதவி வழங்க முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு பிறகு, மகாராஷ்டிரா (CPR-க்கு பதில்) அல்லது நாகலாந்து (இல.கணேசனுக்கு பதில்) கவர்னராக எச்.ராஜா நியக்கப்படலாம் என தெரிகிறது.
.png)