தமிழக மக்களை ஏமாற்றி தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜகவின் எண்ணம் பலிக்காது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது, திமுக கூட்டணியில் முரண்பாடுகள் அதிகம் இருப்பதாக கூறிய ஜெயக்குமார், இந்தியா கூட்டணி நெல்லிகாய் மூட்டை சிதறுவதுபோல் திமுக கூட்டணியும் சிதறும் என்றார்.இந்தியா கூட்டணி உடைந்ததுபோல திமுக கூட்டணியும் உடையலாம். இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே ஒத்த கருத்துகள் இல்லை.
தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதே எங்கள் நிலைப்பாடு. கழட்டி விட்டது விட்டதுதான். பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. தன்னை முன்னிலைப்படுத்தவே அண்ணாமலை பேசி வருகிறார். ஆனால், அவர் பாஜகவை முன்னிலைப்படுத்தவில்லை.பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நடக்காத விஷயத்தை சொல்லி திசை திருப்ப முயற்சிக்கிறார்,
தமிழக மக்களை ஏமாற்றி தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜகவின் எண்ணம் பலிக்காது. நடக்காத விஷயத்தைக் கூறி திசைதிருப்ப அண்ணாமலை முயற்சிக்கிறார். விரைவில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகள் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவோம்" என்றார்.