முதல் பாஜக எம்.எல்.ஏ காலமானார்..!
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டப்பேரவை தொகுதியில் இருந்து பாஜக சார்பில் கடந்த 1996-ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் வேலாயுதன்.
தென்னிந்தியாவில் பாஜக சார்பில் போட்டியிட்டு முதன்முதலாக சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டவர் என்ற பெருமைக்குரியவர்.
இந்நிலையில், வேலாயுதன் வயது முதிர்வு காரணமாக இன்று காலை காலமானார்.
அவரது இறுதி சடங்குகள் நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு அவரது சொந்த ஊரான நாகர்கோவில் அருகேயுள்ள கீழகருப்புக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது.