1. Home
  2. தமிழ்நாடு

பாஜக போடும் பலே கணக்கு..! அண்ணாமலை போட்டியிடும் தொகுதி...!

1

பாஜக - அதிமுக கூட்டணி வருமா? பாஜக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும்? அண்ணாமலை எந்த தொகுதியில் போட்டியிடுவார்? போன்ற கேள்விகள் எழுகின்றன. கடந்த தேர்தலில் அதிமுக (191), பாமக (23), பாஜக (20) என கூட்டணி அமைந்தது. இதில் பாஜக 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. குறிப்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தோல்வியை தழுவினார்.


அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு 68,553 வாக்குகள் பெற்றிருந்தார். இது 38.90 சதவீதம் ஆகும். ஆனால் 24,816 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளார் ஆர்.இளங்கோவிடம் தோல்வி அடைந்தார். இதையடுத்து 2024 மக்களவை தேர்தலில் களமிறங்கினார். கோவை தொகுதியில் போட்டியிட்டு 4,50,132 வாக்குகள் பெற்றார். இது 32.79 சதவீதம் ஆகும். ஆனால் 1,18,068 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.


இந்நிலையில் தான் 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுவது என அண்ணாமலை தரப்பு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடைசியாக போட்டியிட்ட மக்களவை தேர்தலை எடுத்துக் கொண்டால் பாஜக தரப்பு ஆச்சரியப்படும் வகையில் நான்கரை லட்சம் வாக்குகள் கிடைத்தன.


அதில் சட்டமன்றத் தொகுதி வாரியாக பார்க்கும் போது கவுண்டம்பாளையம் தொகுதியில் தான் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறார். எனவே இதே தொகுதியில் போட்டியிட்டால் சரியாக இருக்கும் என்ற கோணத்தில் ஆலோசித்து வருகின்றனர்.


ஏற்கனவே அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் கவனம் செலுத்தி வந்த அண்ணாமலை தரப்பு, தற்போது கவுண்டம்பாளையம் பக்கம் கவனத்தை மாற்றியிருப்பதாக தகவல் அடிபடுகிறது. இந்த தொகுதியை பொறுத்தவரை அதிமுகவிற்கு சாதகமாக விளங்கி வருகிறது. எனவே அதிமுக - பாஜக கூட்டணி அமையும் பட்சத்தில் அண்ணாமலையின் வெற்றி வாய்ப்பு சாத்தியமாக அதிக வாய்ப்புள்ளது என்கின்றனர்.

Trending News

Latest News

You May Like