1. Home
  2. தமிழ்நாடு

அதிமுகவில் இணைந்த பாஜக நிர்வாகி!

1

 ஓபிசி அணியின் மாநில துணை தலைவர் அசோக்குமார் பாஜகவில் இருந்து விலகி இன்று அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்தார். பாஜகவில் இருந்து விலகிய அசோக்குமார், மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சரஸ்வதியின் மருமகன் ஆவார்.

மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட திட்டமிட்டு அதற்கான பணிகளை அசோக்குமார் மேற்கொண்டு வந்தார். ஈரோடு தொகுதியை குறிவைத்து கடந்த 2 ஆண்டுகளாக கோடிக்கணக்கில் செலவழித்து வந்துள்ளார் ஆற்றல் அசோக்குமார். இந்த சூழலில் கடந்த சில நாட்களாகவே பாஜகவில் ஏற்பட்டிருக்க கூடிய பிரச்சனை காரணமாக அதிமுகவில் இணைந்துள்ளார்.

அதாவது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்போது கட்சியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எப்படியும் சீட் வாங்கிவிடலாம் என தொகுதி முழுவதும் சென்று ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்து வந்துள்ளார் அசோக்குமார்.

எனவே, ஈரோட்டுக்கான வேட்பாளராக அசோக்குமார் அறிவிக்கப்படலாம் என்று பாஜக நிர்வாகிகள் இடையே கருதப்பட்ட நிலையில், தற்போது கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவில் இணைந்துள்ளதால் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக பாஜகவின் மூத்த நிர்வாகியாகவும், மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சரஸ்வதியின் மருமகனாக இருக்கும் அசோக்குமார், இன்று சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்று அக்கட்சியில் இணைந்துள்ளார். அதிமுகவில் இணைந்த பாஜக முக்கிய நிர்வாகி அசோக்குமாருக்கு என்ன பொறுப்புகள் வழங்கலாம் என பின்னர் முடிவெடுக்கப்படும் என அதிமுக தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like