1. Home
  2. தமிழ்நாடு

பாஜக வெற்றி.. கை விரலை வெட்டி காணிக்கை செலுத்திய நபர்..!

1

மக்களவை தேர்தல் வாகு எண்ணிக்கை கடந்த 4ம் தேதி நடைபெற்றது.  வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்ததை பார்த்து காளி தேவி கோவிலுக்கு சென்று பிராத்தனை செய்துள்ளார் துர்கேஷ் பாண்டே(வயது 30) சத்தீஸ்கரில் உள்ள காளி கோயிலுக்கு சென்றுள்ளார்.

அங்கு மனமுறுகி பிரார்த்தனை செய்ததுடன் பாஜக வெற்றி பெற வேண்டியுள்ளார்.பின்னர் மாலையில் பாஜக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்று வெற்றி பெற்றது. இதனையடுத்து தான் வேண்டியபடியே தனது இடது கைவிரலை வெட்டி காளி தேவி கோவிலில் காணிக்கையாக வழங்கியுள்ளார். 

கையில் இருந்து ரத்தம் வழிந்து ஓட, வலியால் துடிதுடித்த துர்கேஷ் பாண்டேவை அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கிருந்து அம்பிகாப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவனைக்கு அழைத்து செல்லப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுபோன்ற விபரீதங்களில் யாரும் ஈடுபட வேண்டாம் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like