1. Home
  2. தமிழ்நாடு

எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி இடஒதுக்கீட்டை நீக்க பா.ஜ., ஒருபோதும் அனுமதிக்காது : அமித்ஷா..!

1

உ.பி காஸ்கஞ்ச் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது., பா.ஜ., 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றால், நாட்டில் இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் என ராகுல் கூறுகிறார். எங்கள் மீது அவர் பொய்களை பரப்பி வருகிறார். நாங்கள் இரண்டு முறை முழுப் பெரும்பான்மையுடன் இருந்தோம். ஆனால் இடஒதுக்கீட்டை நீக்கவில்லை. எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி இடஒதுக்கீட்டை நீக்க பா.ஜ., ஒருபோதும் அனுமதிக்காது.

தலித், பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின சகோதர, சகோதரிகளுக்கு உறுதியளிக்கிறேன். நாங்கள் இட ஒதுக்கீட்டை ஆதரிப்பவர்கள். சாதிவெறி, குடும்ப அரசியலை விட்டு, ஏழைகளின் நலனுக்காக பிரதமர் மோடி உழைத்து வருகிறார். ஒவ்வொரு ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பணியை மோடி செய்தார். எப்போதும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களை எதிர்க்கின்றனர். பழங்குடியினர் நலனுக்காக காங்கிரஸ் எதும் செய்யவில்லை. அவர்களுக்கு நீதி கிடைக்க பாடுபடவில்லை. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Trending News

Latest News

You May Like