1. Home
  2. தமிழ்நாடு

வரும் 27-ந் தேதி கன்னியாகுமரி செல்கிறார் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை..!

1

காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு பசு பாதுகாப்பு மகா யாத்திரை கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. இந்த யாத்திரை டெல்லி, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா உள்பட 14 மாநிலங்கள் வழியாக 4 ஆயிரத்து 900 கிலோ மீட்டர் தூரத்தை 182 நாட்களில் கடந்து வருகிற 27-ந்தேதி கன்னியாகுமரியில் நிறைவடைகிறது. இதன் நிறைவு விழா அன்று காலை 9.30 மணிக்கு கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் நடக்கிறது. 

விழாவில் தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யாத்திரையை நிறைவு செய்து வைக்கிறார். இதையொட்டி அவர் 27-ந் தேதி கன்னியாகுமரிக்கு செல்கிறார். மேலும் யாத்திரை நிறைவு விழா நிகழ்ச்சியில் அகில பாரத கோ சேவை அமைப்பாளர் அஜித் பிரசாத் மகோபாத்ரா உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

Trending News

Latest News

You May Like

News Hub