ரூ.1,000 வழங்கக்கோரி அக்.18-ல் பாஜக ஆர்ப்பாட்டம்..!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 115வது பிறந்த நாளையொட்டி கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 15ஆம் தேதி தொடங்கி வைத்தார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் 1.06 லட்சம் பயனாளிகள் பலனடைந்தனர். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் இ சேவை மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மகளிர் உரிமைத்தொகை பெறாதவர்கள் இ-சேவை மையம் மூலம் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இந்நிலையில் அனைத்து மகளிருகும் மாதம் ரூ.1,0 வழங்கக்கோரி விழுப்புரத்தில் அக்டோபர் 18 ஆம் தேதி தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். முன்னதாக மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துக்குள் குழப்பம் ஏற்படுத்தியிருக்கிறார் என்றும், இரண்டு கோடியே 27 லட்சம் குடும்பத் தலைவிகள் இருக்கும் தமிழகத்தில், மகளிர் உரிமைத் தொகை 60% சகோதரிகளுக்குக் கிடைக்கவில்லை எனவும் அண்ணாமலை குற்றஞ்சட்டியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.