1. Home
  2. தமிழ்நாடு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பா.ஜ.க. அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை - கார்கே..!

1

ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய நாட்களில் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. அக்டோபர் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இந்த தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக பா.ஜ.க. அறிவித்துள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் விரும்புகிறது.

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிகள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்துரையாடினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்கே, ஜம்மு காஷ்மீரில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை உருவாக்க ராகுல் காந்தி ஆர்வம் காட்டுவதாக கூறினார்.

‘மக்களவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பா.ஜ.க. நிறைவேற்ற விரும்பிய சில சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன அல்லது நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டன. இதனால் பா.ஜ.க. கவலையடைந்துள்ளது. வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட சில சட்டங்களை நிறைவேற்ற, பா.ஜ.க. தனது மெஜாரிட்டியை பயன்படுத்தியது. ஜம்மு காஷ்மீரைப் பொருத்தவரை தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க. அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை’ என்றும் கார்கே கூறினார்.

Trending News

Latest News

You May Like