1. Home
  2. தமிழ்நாடு

ஜம்முகாஷ்மீர் தேர்தலில் பா.ஜ., தனித்து போட்டி..!

1

 பா.ஜ., தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறியதாவது: ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தலுக்கு கட்சி முழுமையாக தயாராகிவிட்டது, வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் விரைவில் வெளியிடப்படும் .ஜம்மு காஷ்மீரில் எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் பாஜக தேர்தலுக்கு முன் கூட்டணி வைக்காது.

அதே நேரத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் 8 முதல் 10 சுயேச்சை வேட்பாளர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த விவாதங்கள் நிறைவேறினால், கூட்டாக தேர்தலில் போட்டியிடுவதற்கான வியூகம் வகுப்போம் என்றார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த 370 சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக அங்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. வரும் செப்., 3 மற்றும் செப்.,10 அக்.,1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அக்., 4-ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

Trending News

Latest News

You May Like