1. Home
  2. தமிழ்நாடு

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நாளை டெல்லி பயணம்..!

1

பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சு அ.தி.மு.க. தொண்டர்களிடையே கொந்தளிப்பை உருவாக்கி விட்டது. அண்ணாமலை ஓராண்டாகத் திட்டமிட்டு உள்நோக்கத்தோடு அண்ணா, ஜெயலலிதா பற்றி பா.ஜ.க. விமர்சித்து வருகிறார். இதனால் ஆத்திரமடைந்த ஆதிமுக தலைமை, 2 கோடி கட்சி உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகிக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பாஜக உடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை டெல்லி செல்கிறார். கோவை, விமான நிலையத்தில் நாளை காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்லும் அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர்களை சந்தித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குன்னூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் அண்ணாமலை, அதனை ரத்து செய்துவிட்டு நாளை டெல்லி செல்கிறார்.

Trending News

Latest News

You May Like