தமிழகத்தில் பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் - அண்ணாமலை..!

பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, திமுக அரசு அளித்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 50-ஐ கூட நிறைவேற்றவில்லை. பெட்ரோல் விலை ஏற்றத்தில் மத்திய அரசு க்கு தொடர்பு இல்லை. தமிழ்நாடு கொடுத்த பணத்துக்கு மத்திய அரசு திரும்ப கொடுத்துள்ளது.
மத்திய பாஜக அரசு அறிவிப்புகளில் ஊழல் இல்லாத ஆட்சி, கருப்பு பணம் ஒழிப்பு, அமலாக்கத்துறை உள்ளிட்ட துறைகள் மூலம் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி மீட்கப்பட்டுள்ளது. ஊழல் செய்தவர்கள் வெளிநாட்டுக்கு சென்றவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களை உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றம், சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு, ஆயுஷ்மான் பாரத் திட்டம், தூய்மை இந்தியா திட்டம், 37 கோடி பேர் பயன், 1 கோடியே 20 லட்சம் மத்திய அரசு செலவு செய்துள்ளது. 12 கோடி கிராமப்புற வீடுகளில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன, விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு திட்டம், 2.7 கோடி கூரையில்லா வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன, காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த மசோதா, கிஸான் திட்டம், சிறு, குறு விவசாயிகளுக்கு, மீனவர்களுக்கு திட்டம், 2020-2021 கொரோனா தொற்றில் கூட இலக்கை நோக்கி சென்றிருக்கிறோம். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் சேவை, 76 சதவீத குடிநீர் குழாய் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நவோதய வித்யாலயா, கேந்திரய வித்யாலயா 119 பள்ளிகள் திறக்க ஒப்புதல் பெற்றுள்ளோம்.
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு இலக்கமாக மாற்றப்பட்டுள்ளது. ஜப்பானை பின்னுக்கு தள்ளி 4-ஆம் இடத்துக்கு இந்தியா முன்னேறி உள்ளது. மொத்தத்தில் மத்திய பாஜக அரசு அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில், யூனிபார்ம் சிவில் கோடு மட்டும் பாக்கி இருக்கிறது.
இதேபோல, திமுகவில் யாரும் தேர்தல் வாக்குறுதிகளை படிங்கள் என்று கூறமாட்டார்கள். அதற்கு மாறாக 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம் என்று கூறுவர். எனவே, பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துப்பாருங்கள்.
பாஜகவின் வளர்ச்சிக்காக கடைசி வரை பாடுபடுவேன், கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன், அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு குறித்து பிரதமருக்கு நான் கடிதம் எழுதவில்லை. கட்சி முடிவு பற்றி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுவார். தமிழகத்தில் பாஜக கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அல்ல. பாஜக ஆட்சி அமையும் என்று தெரிவித்தார்.