1. Home
  2. தமிழ்நாடு

அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் 12ம் வகுப்பு வரை இலவசக் கல்வி : பாஜக தேர்தல் வாக்குறுதி..!

1

மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பாஜக தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. தலைநகர் போபாலில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். மத்திய அமைச்சர்கள் அஷ்விணி வைஷ்ணவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு முதுநிலைப் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும், ஏழை குடும்பங்களைச் சேர்ந்த அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் 12ம் வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும். பிரதமரின் இலவச சிலிண்டர் திட்டப் பயனாளிகளுக்கு சமையல் காஸ் சிலிண்டர் ரூ.450-க்கு விநியோகிக்கப்படும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு வேலைவாய்ப்பு அல்லது சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். மத்தியபிரதேசத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டதைப் போன்று ஐஐடி, மருத்துவக் கல்லூரிகள் ஏற்படுத்தப்படும். பழங்குடி மக்களின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் ரூ.3 லட்சம் கோடியில் 6 புதிய எக்ஸ்பிரஸ்வே சாலைகள் அமைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like