1. Home
  2. தமிழ்நாடு

பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நாளை தமிழகம் வருகை..!

Q

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகத்தில் நாளை பிரசாரம் மேற்கொள்கிறார்.
ஜே.பி.நட்டா சிதம்பரத்தில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் கார்த்தியாயினி, விருதுநகரில் போட்டியிடும் நடிகை ராதிகாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.
மேலும், புதுச்சேரியில் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு ஆதரவாகவும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி, கரூர் தொகுதிகளிலும் அவர் பிரசாரம் செய்கிறார்.
இன்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். சென்னை கொளத்துார் திரு.வி.நகரில், வட சென்னையில் போட்டியிடும் பால்கனகராஜ், திருவள்ளூர் வேட்பாளர் பொன்.பாலகணபதி, மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் செல்வம் ஆகியோருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.
தமிழகத்தில் பெரும்பாண்மையான இடங்களில் பாஜக வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய அமைச்சர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு தமிழகத்திற்கு வருகை தருகிறார்கள் என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் நிலவி வருகிறது.

Trending News

Latest News

You May Like