1. Home
  2. தமிழ்நாடு

விபத்தில் சிக்கிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சென்ற கார்..!

1

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழ்நாட்டிற்கு வருகை தந்து இருந்தார். அவர் சென்னையில் நடைபெற்ற சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்க வருகை வந்தார். இந்த வருகையின்போது ஜே.பி. நட்டா சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு பாஜகவின் மையக் குழு கூட்டத்தை தலைமையேற்று நடத்தினார். அப்போது எதிர்வரும் சட்டசபை தேர்தல் குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் தமிழ்நாட்டு பயணத்தை முடித்து கொண்டு ஜே.பி. நட்டா விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார். முன்னதாக சாலை மார்க்கமாக காரில் சென்றார். அந்த சமயத்தில் ஜே.பி.நட்டா பயணித்த கார், திடீரென விபத்தில் சிக்கியது. அவர் சென்ற கார் பிரேக் பிடிக்காமல் சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற பாதுகாப்பு வாகனத்தின் மீது மோதி நின்றுள்ளது. அதிர்ஷ்டவசமாக பெரிய பாதிப்பு ஒன்றும் ஏற்பட்டவில்லை.

அந்த காரில் பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் பயணம் செய்தார். இந்த திடீர் விபத்தால் அவரது விமான நிலைய பயணம் சற்று தள்ளிப்போனதாக கூறப்படுகிறது. இறுதியாக விமானத்தில் ஜே.பி.நட்டா புறப்பட்டு சென்றார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக வேலூரில் உள்ள ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு சென்று ஜே.பி. நட்டா சாமி தரிசனம் செய்தார்.

தமிழ்நாட்டில் அரசியல் களம் விறுவிறுப்பு அடைந்து வருகிறது. பாஜக தலைமையில் இருந்து ஒவ்வொருவதாக தமிழ்நாட்டை குறிவைத்து வருகின்றனா். இந்த முறை அதிமுகவுடன் பாஜக தனது கூட்டணியை உறுதி செய்துள்ளது. மேலும் பழைய கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. இந்த முறை ஆட்சியை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று பாஜக கங்கனம் கட்டி கொண்டு திரிகிறது. அதற்கான அனைத்து வேலகைளையும் செய்து வருகிறது.

Trending News

Latest News

You May Like