பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்..!

தமிழகத்தில் பாஜக அமைப்பு தேர்தல் நடைபெற்றது. இதில் கிளைத்தலைவர், மண்டல தலைவர், மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த சூழலில், அண்ணாமலை மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு நயினார் நாகேந்திரன் மாநில தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை திடீர் பயணமாக இன்று டெல்லி சென்றுள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் அண்ணாமலை டெல்லி புறப்பட்டார். பாஜகவில் தேசிய பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில் அண்ணாமலையின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும் பாஜக மூத்த தலைவர்களை அண்ணாமலை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெள்யாகியுள்ளது.