பாரதிய ஜனதா எம்.பி கொரோனா தொற்றால் உயிரிழப்பு!
பா.ஜ.க மாநிலங்களவை உறுப்பினர் அசோக் காஸ்தி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 55.
கர்நாடகாவை சேர்ந்த இவர், இந்த ஆண்டு ஜூன் மாதம்தான் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் செப்டம்பர் 2ஆம் தேதி அவருக்கு கடுமையான கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், அசோக் காஸ்தி எம்.பி. உறுப்புகள் செயலிழப்பு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை உடல் ஒத்துழைக்காததால் உயிரிழந்தார்.
அசோக் காஸ்தியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அசோக் காஸ்தி பாஜகவின் ஓபிசி பிரிவின் முன்னாள் பொதுச் செயலாளராக இருந்தவர். கர்நாடக ஓபிசி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராகவும் பணியாற்றியவர்.
newstm.in