பாஜக எம்எல்ஏ காலமானார்!

குஜராத் மாநிலம் காடி தொகுதி எம்எல்ஏ கர்ஷன்பாய் சோலன்கீ(68) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், இன்று (பிப்.4) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மேலும், அவரது இறுதி சடங்கு காடி தாலுக்காவிலுள்ள அவரது சொந்த ஊரான நாகராஸன் கிராமத்தில் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
பாஜக கட்சியை சேர்ந்த அவர், காடி சட்டப்பேரவை தொகுதியில் 2017, 2022 தேர்தல்களில் வெற்றி பெற்றார்.