பாஜகவில் ஐக்கியமான கூலிப்படை தலைவன் மனைவி கைது..!
பாஜகவில் ஐக்கியமான கூலிப்படை தலைவன் மனைவி கைது..!

பிரபல ரவுடி மற்றும் கூலிப்படை தலைவன் என்று கூறப்படும் படப்பை குணாவின் மனைவியை காவல்துறையினர் திடீரென கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அருகே உள்ள சுங்குவார்சத்திரம் பகுதியைச் சேர்ந்த படப்பை குணா என்பவர் கூலிப்படை தலைவனாகவும் ரவுடியாகவும் அந்த பகுதியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அவரை பிடிப்பதற்காக காவல்துறையினர் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், படப்பை குணாவின் மனைவி செல்லம்மாள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, பாஜகவின் முக்கிய பிரமுகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் செல்லம்மாள் வீட்டிற்கே சென்று வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்த புகைப்படங்கள் வைரலான நிலையில் திடீரென ரவுடி படப்பை குணா மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2 நாட்களுக்கு பாஜகவில் இணைந்து, முன்னாள் மத்திய அமைச்சரையும் சந்தித்த எல்லம்மாளை காவல்துறையினர் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.