1. Home
  2. தமிழ்நாடு

மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் காப்பீடு - வெளியான பாஜக தேர்தல் அறிக்கை..!

Q

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சியினர் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. 

பாஜகவின் முக்கிய வாக்குறுதிகள்:

நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை நடைமுறைப்படுத்தப்படும். அதையொட்டி, நாடு முழுவதும் பொதுவான வாக்காளர் பட்டியல் கொண்டு வரப்படும்

2036-ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்

2025-ம் ஆண்டு பழங்குடிகள் ஆண்டாக கொண்டாடப்படும்.

70 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் காப்பீடு வழங்கப்படும்

திருநங்கைகளுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும்

இந்தியாவின் பெருமைமிகு தமிழ் மொழி வளர்க்கப்படும்

மக்கள் மருந்தகத்தில் 80% தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்.

முத்ரா கடன் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படும்.

ரேஷனில் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் மேலும் 5 ஆண்டுக்கு நீட்டிக்கப்படும்.

ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் வந்தே பாரத் ரயில் கொண்டுவரப்படும்

திருவள்ளுவர் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும்

இந்தியாவின் தெற்கு, வடக்கு, கிழக்கு என மூன்று திசைகளிலும் புல்லட் ரயில் சேவை கொண்டுவரப்படும்

புதிய வந்தே பாரத் மெட்ரோ ரயில்கள் தொடங்கப்படும்

பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகியோரை மையமாக கொண்டு பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்குவது குறித்து நாங்கள் பேசுகிறோம். இளைஞர்களின் கனவை நனவாக்க பணியாற்றுகிறோம். தீர்வுகளை பற்றி மட்டுமே நாங்கள் பேசுகிறோம் என கூறினார்.

Trending News

Latest News

You May Like